sadak 2

ஆலியா பட், ஆதித்யாராய் கபூர், சஞ்சய் தத் உள்ளிட்டோரை வைத்து மகேஷ் பட் இயக்கிய படம் சடக் 2. இது மகேஷ் பட் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம். இந்த படத்தை இத்தனை வருடங்கள் கழித்து தனது இரண்டாவது மகளை ஹீரோயினாக வைத்து இரண்டாம் பாகத்தை எடுத்தார் மகேஷ்.

Advertisment

முதலில் இந்த படத்திற்கு பெரிதாக எந்தஎதிர்பார்ப்பும் இல்லாமல் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுஷாந்தின் மறைவிற்கு பிறகு இந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. நெபோடிஸம் மற்றும் மகேஷ் பட் உள்ளிட்ட காரணங்களால் இந்த படத்தின் ட்ரைலரில் தொடங்கி தற்போது ரிலீஸான படம் வரை பல மக்கள் எதிர்க்கின்றனர்.

Advertisment

ட்ரைலர் வெளியானபோது அதிக டிஸ்லைக்குகள் பெற்ற வீடியோ என்னும் சாதனைய பெற்றது. இத்தனை எதிர்ப்பையும் மீறி ஓடிடியில் 28ஆம் தேதி வெளியான படமும், விமர்சன ரீதியாக மிகவும் மோசமாக இருந்ததால் ஐஎம்டிபி ரேட்டிங்கிலும் மிகவும் குறைந்த மதிப்பெண்களை பெற்று மீண்டுமொரு மோசமான சாதனையை பெற்றுள்ளது.

இதனிடையே, 'சடக் 2' படத்தைப் பார்த்துவிட்டு பலரும் ஐஎம்டிபி தளத்தில் வாக்களிக்கதொடங்கினார். கிட்டத்தட்ட 58,000 பேர் வாக்களித்ததில் 95 சதவீதம்பேர் 1 மதிப்பெண்களே வழங்கியுள்ளனர். இதனால் 1 மதிப்பெண் மட்டுமே பெற்று, இந்தியாவில் மிகவும் குறைவான ரேட்டிங் பெற்ற படம் என்னும் மோசமான சாதனையை படைத்துள்ளது.