ADVERTISEMENT

"அவை அனைத்தும் ஆதாரமற்றவை, போலியானவை" - தயாரிப்பாளர் போனி கபூர் திடீர் அறிவிப்பு

01:03 PM Jan 02, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சக்கைப்போடு போட்டு தமிழகத்தில் மட்டும் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் ரஜினி, சிம்பு, வசந்தபாலன் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளைப் படக்குழுவிற்குத் தெரிவித்தனர். தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'லவ் டுடே' படம் இந்தியில் ரீமேக்காகவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடிப்பதாகவும் டேவிட் தவான் அதனை இயக்கவுள்ளதாகவும் போனி கபூர் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் இத்தகவலை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை. சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

போனி கபூர், அஜித்தின் 'துணிவு' படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT