Mystery gang misused the 'valimai' movie filmmaker's credit card

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் அஜித் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் தமிழுக்கு தயாரிப்பாளராக அறிமுகமானார். சமீபத்தில் இவர் தயாரிப்பில் வெளியான 'வலிமை' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனை அடுத்து தமிழில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள 'வீட்ல விசேஷங்க' படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் போனி கபூர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.3.82 லட்சம் முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி போனி கபூர் வங்கிக்கணக்கில் இருந்து மர்ம நபர்களால் ரூ.3.82 லட்சம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த போனி கபூர் சம்மந்தபட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதன் பிறகு காவல் துறையிடம் க்ரெடிட் கார்ட் தகவல்களை பற்றி என்னிடம் யாரும் கேட்கவில்லை, இதுதொடர்பாக எந்த அழைப்பும் வரவில்லை என கூறியுள்ளார்.

Advertisment

போனிகபூர் க்ரெடிட் கார்டை பயன்படுத்தும் போது அவரது விவரங்களை மர்ம நபர்கள் சேகரித்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகப்படுகின்றனர். மேலும் குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு பணபரிமாற்றம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த முறைகேடு வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.