ADVERTISEMENT

'பிரச்சினை நிறுத்தக் கோடுகள் அல்ல, வழி காட்டிகள்' - கே. பாக்யராஜ் அறிவுரை  

12:38 PM Jul 09, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுமுகங்களை வைத்து உருவாகியுள்ள படம் 'சந்தோஷத்தில் கலவரம்' . புதுமுக இயக்குனர் கிராந்தி பிரசாத் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் பங்கேற்ற இயக்குநர் கே. பாக்யராஜ் பாடல்களை வெளியிட்டு பேசுகையில்.... "இங்கே உள்ள படக் குழுவைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு தமிழில் பேச முயற்சி செய்து தமிழில் பேசினார்கள். அந்த ஆர்வம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கே கதாநாயகன் ஆர்யன் தமிழில் வித்தியாசமான வார்த்தைகளைத் தேடிப் பிடித்து பேசினார். எப்படி பேசுகிறார் என ஆச்சரியமாக இருந்தது. என்னைத் தமிழில் இலக்கணப்படி பேச சொன்னால் பேச வராது . கிராந்தி பிரசாத் தமிழ் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார். அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார். இயக்குநர் கிராந்தி பிரசாத் இங்கே பேசும் போது படத்தில் பல பிரச்சினைகள் வந்ததாகச் சொன்னார். பிரச்சினை இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி வரும். அந்த வெற்றியை ரசிக்கவும் முடியும். நான் என் டைரியில் எழுதி வைத்திருப்பேன் "பிரச்சினைகள் நிறுத்தக் கோடுகள் அல்ல. அவை வழிகாட்டும் கோடுகள்" என்று.


'பதினாறு வயதினிலே' படத்தில் நாங்களும் பிரச்சினையைச் சந்தித்தோம். அது எங்கள் இயக்குநருக்கு முதல் படம் உதவி இயக்குநராக எனக்கும் முதல் படம். முதல் ஷெட்யூல் பெங்களூரிலிருந்து மைசூர் போய் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்துவதாகத் திட்டத்துடன் போயிருந்தோம். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு புறப்பட்டபோது படப்பிடிப்பு ரத்து என்றார்கள். போன வேகத்தில் ஊர் திரும்ப வேண்டியதாகிவிட்டது. தன் முதல் பட ஆரம்பமே இப்படி இருந்தால் எங்கள் இயக்குநருக்கு எப்படி இருந்திருக்கும். அதே மாதிரி நான் முதலில் இயக்கிய 'சுவர் இல்லாத சித்திரங்கள்' பூஜையுடன் தொடங்கியபோது என் கூட இருந்த நண்பருக்கு பிரியாணி சாப்பிட்ட போது ஏதோ ஒத்துக் கொள்ளாமல் போய் வலிப்பு வந்து பெரிய பிரச்சினையாகி விட்டது. எனவே பிரச்சினை எல்லாருக்கும் இருக்கும். பிரச்சினைக்குப் பிறகு வரும் வெற்றியையே அனுபவிக்க முடியும் . வெயிலில் சுற்றினால் தான் நிழலின் அருமை தெரியும். கிராமத்தில் சொல்வார்கள் விளையும் போதே சோறாக விளைந்துவிட்டால் விறகு எதுக்கு? வறட்டி எதுக்கு? என்பார்கள்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT