தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். திரைப்படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாகத்திரைப்படங்களைத்தயாரித்தும் வருகிறார்.அந்த வகையில் நான்கு பெண்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
பெண்களின் மாறுபட்ட கதைகளைக் கொண்டாட, நான்கு பெண் இயக்குநர்கள் இயக்கியஆந்தாலஜி படத்திற்கு ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் இயக்குநர்களாக அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகியோர் உள்ளனர். மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.