ADVERTISEMENT

வைரலாகும் ஜி.வி. பிரகாஷ் பட டீசர்! 

10:47 AM Feb 14, 2021 | santhosh

ADVERTISEMENT

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் என்பவர் ‘பேச்சிலர்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்க திவ்யபாரதி ஹீரோயினாக நடிக்கின்றார். இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரிகிறார்.

ADVERTISEMENT

கரோனா அச்சுறுத்தலால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதன்பின் தமிழக அரசு வழங்கிய அனுமதியை அடுத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டு சமீபத்தில் முழு ஷூட்டிங்கும் முடிவடைந்துவிட்டது. மேலும் இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் நடித்துள்ளார். இவருடைய காட்சிகளை 4 நாட்கள் படமாக்கியுள்ளது படக்குழு. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைராலகி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT