gv prakash's bachelor movie release date announced

Advertisment

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் உதவி இயக்குநராகபணிபுரிந்த சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார்.இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி. பிரகாஷ் பணிபுரிகிறார். ‘பேச்சிலர் ’படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவுசெய்த படக்குழு, நீண்ட நாட்களாக படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="34a656b4-d26b-4c91-85a8-bf3c2e844cb4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_24.jpg" />

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ‘பேச்சிலர்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.