ADVERTISEMENT

வேர்ல்ட் ப்ரிமியரில் கண் கலங்கிய அவெஞ்சர்ஸ் ரசிகர்கள்...

06:07 PM Apr 23, 2019 | santhoshkumar

இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’, உலகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 26ஆம் தேதி திரயரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. மிக வேகமாக புக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் ஒரு நாளுக்கு பத்து லட்சத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் புக் செய்யப்படுகிறதாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று திங்கள் அன்று லாஸ் வேகாஸில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் பிரத்யேக காட்சி முதன் முறையாக போடப்பட்டது. இதை காண பல பிரபலங்களும், அவெஞ்சர்ஸ் ரசிகர்களும் அந்த திரையரங்கில் சூழ்ந்திருந்தனர்.

கிறிஸ் ஹேம்ஸ்வொர்த், கிறிஸ் எவான்ஸ், ராபர்ட் டௌனி ஜேஆர், ஸ்கார்லட் ஜொகன்ஸன், கிறிஸ் பிராட், பிரெய் லார்ஸன், ஜெர்மி ரன்னர் உள்ளிட்ட அவெஞ்சர்ஸ் பிரபலங்கள் இந்த பிரத்யேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிரத்யேக காட்சியை கண்ட பலரும் ட்விட்டரில் ஆறு முதல் ஏழு முறை கண் கலங்கிவிட்டேன். இதில் மனதை தொடும் காட்சிகள் பல இருக்கின்றன என்று ட்விட்டரில் படத்தை பற்றி தெரிவிக்காமல் படத்தை பாராட்டியிருக்கிறார்கள் ரசிகர்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT