ADVERTISEMENT

இயக்குநர் ஹரியின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

10:33 AM Sep 08, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஹரி இயக்கத்தில் அருண்விஜய், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அருண்விஜய் 33'. இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ள படக்குழு, காரைக்குடி, பழனி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியது. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 9ஆம் தேதி (நாளை) 'அருண்விஜய் 33' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படவுள்ளது. இத்தகவலை நடிகர் அருண்விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT