/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/31_38.jpg)
ஹரி இயக்கத்தில் அருண்விஜய், சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அருண்விஜய் 33'. இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ள படக்குழு, காரைக்குடி, பழனி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியது. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் நடிகர் அருண்விஜய்யின் 33ஆவது படமாகும். அதைக் குறிப்பிடும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கீர்த்தி சுரேஷ், பா.ரஞ்சித், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட திரையுலகச் சேர்ந்த 33 பிரபலங்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு தமிழில் யானை என்றும் தெலுங்கில் எனுகு என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)