yaanai movie release on 6th may

இயக்குநர்ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் யானை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபுஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜி விபிரகாஷ் இசையமைக்கிறார். யானை படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'யானை' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவும்என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர்மற்றும்பாடல்கள் பலரின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment