ADVERTISEMENT

"என்னோட அண்ணன் என்னோட தளபதி" - வைரலாகும் அட்லீயின் பதிவு

01:15 PM Sep 23, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். குறிப்பாக முன்னணி நடிகரான விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என மூன்று ஹிட் படங்களை கொடுத்து பலரது கவனத்தை பெற்றார்.

இதனை தொடர்ந்து தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கின்றனர். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்திலும் விஜய் சிறப்பு தோற்றத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதனிடையே அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் ஷாருக்கானுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதற்கு மேல் என் பிறந்தநாளுக்கு என்ன கேட்க முடியும். பெஸ்ட் பர்த்டே. மை டியர் ஷாருக்கான் சார் மற்றும் என்னோட அண்ணன் என்னோட தளபதி" என குறிப்பிட்டுள்ளார். இந்திய அளவில் புகழ் பெற்ற இரு நடிகர்களும் ஒரே புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளதால் இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அட்லீ தனது 36வது பிறந்தநாளை கடந்த 21ஆம் தேதி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT