ADVERTISEMENT

மான்ஸ்டருடன் மோத ரெடி ; புது அப்டேட் வெளியிட்ட ஆர்யா

03:42 PM Aug 19, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'எனிமி' படத்தைத் தொடர்ந்து தற்போது சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் 'கேப்டன்' படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. 'திங்க் ஸ்டுடியோஸ்' மற்றும் ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் மான்ஸ்டரை மையமாக வைத்து உருவாகி வருகிறது என கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இரண்டாவது பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் 'கேப்டன்' படத்தின் புது அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் ட்ரைலர் வருகிற 22-ஆம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளது. இதனை ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தங்களது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டரில் மான்ஸ்டருடன் மோத ரெடியாக இருப்பது போல் ஆர்யா நிற்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT