D.Imman - Yuvan Alliance; The film crew who released the update

தமிழ் சினிமாவில் புது ஜானர் மற்றும் புது முயற்சிகளை எடுத்து வருபவர் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். அந்த வகையில் 'டெடி' படத்தை தொடர்ந்து 'கேப்டன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் முக்கியக்கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'திங்க் ஸ்டுடியோஸ்' மற்றும் ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மான்ஸ்டரை மையமாக வைத்து இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் 'கேப்டன்' படத்தில் யுவன் ஷங்கர் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். இதனை இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து யுவனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பாடல் மெலோடி பாடலாக இருக்கும் எனவும் பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளதாகவும் விரைவில் இப்பாடல் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment