ADVERTISEMENT

ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த ஹீரோ!

10:39 AM Mar 12, 2019 | santhoshkumar


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸ் கடந்த ஆண்டு விஜயை வைத்து சர்கார் படத்தை இயக்கினார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஏ.ஆர். முருகதாஸை எந்த ஹீரோவை வைத்து இயக்கப்போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில், ரஜினியை வைத்துதான் படம் இயக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. இந்த படத்திற்கான படபிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்த படம் முடிந்தவுடன் முருகதாஸ் அடுத்து வேறு யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற தகவலும் சினிமா வட்டத்தில் வளம் வந்துகொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனை வைத்துதான் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது. இது தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ஸ்டாலின் என்றொரு படத்தை முருகதாஸ் இயக்கி இருக்கிறார். இந்த படம் செம ஹிட் அடித்திருந்தது. பின்னர், சில வருடங்கள் கழித்து பிரின்ஸ் மஹேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்றொரு படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் இயக்கினார். ஆனால், இந்த படம் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT