ADVERTISEMENT

'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

06:00 PM Jan 25, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குனர் சிவா இயக்கி வரும் படம் 'அண்ணாத்த'.

இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இருக்கும் நிலைமை சீரானவுடன் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கி, வரும் தீபாவளிக்கு 'அண்ணாத்த' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் கசிந்தது. இந்நிலையில் 'அண்ணாத்த' படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT