Skip to main content

ரஜினி வீட்டுக்கு வந்த ஏவிஎம் சரவணன்... விஷயத்தைக் கேள்விப்பட்டு மகிழ்ந்த ரசிகர்கள்!

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

avm saravanan met rajinikanth

 

2007-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'சிவாஜி'. 'ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரேயா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர்கள் விவேக், ரகுவரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேலாக வசூலித்து திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ரஜினியின் ஸ்டைல் மற்றும் ஆக்ஷன், காதல், காமெடி, செண்டிமெண்ட் என பக்காவான மாஸ் கார்ஷியல் படமாக வெளிவந்த இப்படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதனையொட்டி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

 

இந்நிலையில் இப்படத்தைத் தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தின் தலைவர் சரவணன், அவரது மகன் குகன், மற்றும் பேத்தி அருணா குகன் ஆகியோர்  இன்று நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சென்று சந்தித்துள்ளனர். மேலும் இந்த சந்திப்பில் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அண்மையில் இயக்குநர் ஷங்கர் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். படம் வெளியாகி 15 வருடங்கள் கழித்தும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 'சிவாஜி'யை கொண்டாடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்