ADVERTISEMENT

கரோனாவில் இருந்து மீண்ட தனுஷ் பட நடிகை!

01:23 PM May 11, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

இந்த நிலையில், 'அசுரன்' பட நடிகை அம்மு அபிராமி தற்போது கரோனா தொற்றிலுருந்து விடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் அன்பான வேண்டுதல்களாலும், கடவுளின் கிருபையாலும் நான் கோவிட்-19 தொற்றுலிருந்து முற்றிலும் மீண்டுள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். முகமூடியை அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். நீங்கள் வெளியே செல்வதைத் தவிர்த்தால் கடவுள் இரக்கமுள்ளவராக இருப்பார்" என பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT