/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/437_1.jpg)
மிதுன் ஆதித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'பாலமுருகனின் குதூகலம்'. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பட்டாசு, காக்கி சட்டை, கோடி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமாரிடம்துணை இணை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
புதுமுக நடிகர் பாலமுருகன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அம்முஅபிராமி நடிக்கிறார். படத்தின்முக்கிய கதாபாத்திரத்தில்குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதன் கிளாப் போர்டுஅடித்து திருப்பூரில்தொடங்கி வைத்தார். முழு வீச்சில் பட்டப்படிப்பைமுடித்துவிட்டு விரைவில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)