ammu abhirami about  jigiri dosthu movie

Advertisment

பிரபல நடிகர் ரியாஸ் கான் மகன் ஷாரிக் ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஜிகிரி தோஸ்து’. இப்படத்தில் அம்மு அபிராமி, விஜே ஆஷிக், பவித்ரா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரண்.வி இயக்கி நடித்தும் உள்ளார். மேலும்பிரதீப் ஜோஸோடு இணைந்து தயாரித்தும் உள்ளார். இவர் ஷங்கரின் 2.0 படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். அஷ்வின் விநாயகமூர்த்தி என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படக்குழுசெய்தியாளர்களைச் சந்தித்தது.படம் குறித்து அம்மு அபிராமி பேசுகையில், “நான் லீட் ரோல் பண்ண சமயத்தில் தான் இந்த படம் வந்தது. இந்த கதையில் கதாநாயகியாக நடிப்பதை தாண்டி, சில விஷயங்கள் ரொம்ப புதுசா இருந்தது. என்னுடைய கதாபாத்திரம் வழக்கமாக வருவது தான். ஆனால் அதில் குட்டி டிவிஸ்ட் இருக்கும். இதில் நடித்தது ஜாலியாக இருந்தது” என்றார்.