ADVERTISEMENT

தனுஷுடன் மீண்டும் கைகோர்க்கும் அமீர்!

04:09 PM Sep 07, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘டி43’ படத்திற்கு ‘மாறன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘மாஃபியா’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் தனுஷுடன் கூட்டணி அமைத்தார் இயக்குநர் கார்த்திக் நரேன். இக்கூட்டணியில் உருவாகிவரும் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, மகேந்திரன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். நடிகர் தனுஷின் பிறந்த தினத்தையொட்டி வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்த நிலையில், 'மாறன்' படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இயக்குநர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அமீர் நடித்துவரும் கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உரிய நேரத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, இயக்குநர் அமீர், தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT