/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arun_3.jpg)
நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ படத்திலும், ஆனந்த் எல். ராய் இயக்கும் ‘அத்ரங்கி ரே' படத்திலும்நடித்துள்ளார். இதையடுத்து நடிகர் தனுஷ், செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துவருகிறார்.கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,நடிகர் தனுஷ்அடுத்ததாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர்அருண் மாதேஸ்வரன் தற்போது செல்வராகவன் நடிக்கும் 'சாணிக்காயிதம்'படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை தொடர்ந்துநடிகர் தனுஷை வைத்து கேங்ஸ்டார் படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்த அதிகாரபூர்வஅறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் வசந்த் ரவி நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள 'ராக்கி' திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில்வெளியாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)