ADVERTISEMENT

"தமிழில் என் படம் வெற்றியடைந்தால்..." - நடிகர் அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி!

04:00 PM Dec 15, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் அல்லு அர்ஜுன் பேசுகையில், "நான் தமிழில் பேசும்போது நிறைய தவறு வரும். தமிழில் பேசி நிறைய வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் தமிழில்தான் பேசப்போகிறேன். முதலில் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. தேவி பிரசாத் கதையை கேட்டு இந்தப்படம் தமிழ் மாதிரியே இருக்கு என்றார். அதற்கு நான், நானே தமிழ்தானே என்றேன். சௌத்திரி சார் வட இந்தியாவில் என்னை பற்றி பேசினார்கள் என்றார். ஆனால் நம் ஊரில் நம்மை பற்றி பேசவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதை இப்படம் போக்கும். இப்படம் தமிழில் அப்படியே பொருந்தும். இப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி தந்ததில் மிக முக்கிய பங்காற்றிய மதன் கார்க்கி சாருக்கு நன்றி. மேலும், சுகுமார் சாருக்கும் நன்றி.

நான் ஹீரோவாக மாறியது ஆர்யா படத்தில்தான். அப்போதிருந்தே நாம் எப்போது படம் செய்யலாம் என்று அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். நாம் இருவரும் சேர்ந்தால் நல்ல படமாக இருக்கனும் என்று அவர் சொல்லினார். இந்தப்படம் அந்தளவு ஈஸி இல்லை. புஷ்பா படம் எடுப்பது, நான்கு படங்கள் எடுப்பது போன்றது. ஆனால் சுகுமார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். மொத்த குழுவுமே காட்டுக்குள் மிகக்கடினமாக உழைத்திருக்கிறார்கள். தமிழில் ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு. இங்கு பாட்டு ஹிட் ஆனவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன். தமிழில் ஜெயித்தால்தான் என் வாழ்வு முழுமையாகும், இங்கிருந்து என்னை பாராட்டினால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். புஷ்பா அதை செய்யும். இந்தப்படம் சந்தன மரக்கடத்தலின் பின்னணியில் நடக்கும் புஷ்பாவின் கதை, அவ்வளவுதான். இதில் அரசியல் எல்லாம் இல்லை. இந்தப்பட கேரக்டருக்கு மாறியது சவாலாக இருந்தது. லுக் செட் பண்ணவே எங்களுக்கு 4 மாதம் ஆனது. படம் வெளியான பிறகு இன்னும் நிறைய பேசலாம். இந்தப்படத்தில் அவ்வளவு விஷயம் இருக்கிறது. ஷீட்டிங் ஸ்பாட் போகவே 2 மணி நேரம் ஆகும். அங்கு லைட் இருக்காது. காட்டுக்குள் நிறைய கஷ்டங்கள் இருக்கும். எல்லாவற்றையும் கடந்துதான் படமாக்கியுள்ளோம். ராஷ்மிகா வித்தியாசமாக பண்ணிருக்காங்க. பெரிய பெரிய நட்சத்திரங்கள் வித்தியாசமான லுக்கில் அட்டகாசமாக பண்ணிருக்காங்க. முக்கியமாக பகத் பாசில் நடிப்பதை பார்த்து ரசித்தேன். நீங்கள் அனைவரும் கொண்டாடும் படமாக இது இருக்கும்" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT