/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_282.jpg)
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாகவுள்ளது.
இதனிடையே சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தார். அதில் போக்குவரத்து ஊழியர்களைகாயப்படுத்தும் வகையில் அல்லு அர்ஜுன் நடித்திருப்பதாக தெலுங்கானா மாநில போக்குவரத்து கழகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த கழகத்தின் தலைவர் சஜ்ஜனார், " நடிகர், நடிகைகள் மற்றவர்களை விட சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அப்படிஇருக்கையில் நடிகர் அல்லு அர்ஜுன் பஸ் போக்குவரத்தை குறைத்து பேசும் ஒரு தனியார் விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். மக்கள் வாழ்க்கையில் ஒன்றாக கலந்திருக்கும் பஸ் போக்குவரத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசும் விளம்பரம் அல்லு அர்ஜுனுக்கு தேவையா எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் விளம்பரத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி எதிர்கொள்வோம் எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)