retired ig about pushpa movie

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. கடந்த 7ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஒரு முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படம் குறித்து திருப்பதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஜி காந்தா ராவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், "புஷ்பா படத்தில் ஒரு கடத்தல்காரரை ஹீரோவாக காண்பித்துள்ளனர். காவல்துறையை லஞ்சம் வாங்கும் அதிகாரிகளாக காட்டுகின்றனர். இது வேதனை அளிக்கிறது.

Advertisment

இயக்குநர் சுகுமார் மற்றும் புஷ்பா படக்குழுஎங்களிடம் வந்தபோது​​நாங்கள் பல விஷயங்களை சொன்னோம். ஆனால் அவர்கள் இப்படி எடுத்து வைத்துள்ளார்கள். ஆட்கடத்தலைத் தடுக்க குடும்பத்தை விட்டுக் காடுகளுக்குச் சென்று பணிபுரியும் காவலர்களை இரண்டாம் பாகத்திலாவதுசரியாகக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், சந்தன மரக் கடத்தலில் அரசியல்வாதிகள் ஈடுபடுவது வெறும் யூகமே தான் என்றும் தான் பணியில் இருக்கும் போது எந்த ஒரு அரசியல்வாதியும் தன்னை அழைக்கவில்லை எனவும் கூறினார்.