ADVERTISEMENT

பாதுகாப்பு உகரணங்களுடன் நடந்துமுடிந்த ஷூட்டிங்... 

07:07 AM May 26, 2020 | santhoshkumar

ADVERTISEMENT


கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் கரோனா பீதியாக உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது ஒரு லட்சட்த்தி நாற்பதாயிரத்தை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் மேலானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT


கரோனாவால் கடந்த மூன்று மாதங்களாக தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தற்போது சில பணிகளை நிபந்தனைகளுடன் நடத்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகிறது. தமிழகத்தில் சின்னத்திரை ஷூட்டிங்கிற்குப் பல நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் 'ஆயுஷ்மான் மிசன்' என்கிற திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கரோனா விழிப்புணர்வு படத்தை பால்கி இயக்க, அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். அரசின் அனுமதி பெற்று, மும்பையிலுள்ள கமலிஷ்டான் ஸ்டூடியோவில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந்த ஷூட்டிங் 2 மணி நேரத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கரோனா சமயத்தில் வீட்டினுள் அல்லாமல் வெளியே உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் நடைபெற்ற முதல் ஷூட்டிங் என இதைக் கருதலாம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT