laxmi

தமிழில் வெற்றிபெற்ற, 'காஞ்சனா' தொடர் படத்தின் முதல் பாகத்தை இந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்க, அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு, 'லக்‌ஷ்மி பாம்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. கடந்த வருடமே தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாரக இருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது. அதன்பின் இப்படம் ஹாட் ஸ்டாரில் நவம்பர் 9ஆம் தேதி நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், படத்தின் பெயர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. 'லக்‌ஷ்மி' என்ற இந்து கடவுளின் பெயரோடு 'பாம்' என்ற வார்த்தையை சேர்த்து வைத்திருப்பது, அக்கடவுளை அவமதிப்பதுபோல் உள்ளது என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் இப்படத்தின் பெயர் லக்‌ஷ்மி என்று மாற்றம் செய்யப்பட்டது.

Advertisment

இதனிடையே இப்படத்தில் 'பம் போலே' என்னும் வீடியோ பாடல் வெளியாகி பலராலும் வரவேற்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் லவ் ஜிஹாத்திற்கு ஆதரவாக காட்சிகள் இருக்கிறது. படத்தில் இந்து கடவுளை அவமதிக்கின்றனர் என பல்வேறு வழிகளில்சமூக வலைதளங்களில்எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே தலைப்பு சம்மந்தமான எதிர்ப்பால் தலைப்பு மாற்றப்பட்ட நிலையில், இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகினறனர்.

வலதுசாரி சிந்தனையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோக்களில் ஒருவர் அக்‌ஷய் குமார். ஆனால், அவர் நடித்திருக்கும் படத்திற்கே இதுபோன்ற எதிர்ப்புகளா என்று பலரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

Advertisment