
இந்தியாவின் முன்னணி நடிகரான அக்ஷய்குமார் வரிசையாக ஒன்பது படங்களுக்கு மேல் நடித்து வந்தார். இந்த ஊரடங்கு சமயத்தில் அவரது இரண்டு படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, அதில் 'லக்ஷ்மி பாம்' என்னும் படம் மட்டும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. 'சூர்யவன்ஷி' படம் தீபாவளி பண்டிகையின்போது வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனிடையே 'பெல்பாட்டம்' என்றொரு படத்தில் நடிப்பது குறித்து அறிவிப்பு வெளியானது. தற்போது ஊரடங்கால் இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகுவதாக இருந்த இப்படம் ஊரடங்கு காரணத்தால் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் பாலிவுட் பட்டாளமே நடிக்கும் இப்படத்தை ரஞ்சித் திவார் இயக்குகிறார். தற்போது இப்படம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் இங்கிலாந்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், லாக்டவுன் முடிந்த பின்னர் வெளிநாட்டில் எடுக்கப்போகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இச்செய்தியைப் படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)