ADVERTISEMENT

சீனாவில் வெளியாகும் அஜித் படம்....

06:05 PM Jun 05, 2019 | santhoshkumar

விஸ்வாசம் படத்தின் ஹிமாலய வெற்றியை அடுத்து நடிகர் அஜித், ஹெச். வினோத் இயக்கத்தில்‘நேர்கொண்ட பார்வை’என்ற படத்தில் நடித்தார். அது பிங்க் என்னும் ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. அஜித்தின் படங்கள் வழக்கமாக ஆந்திராவில்தான் ஷூட்டிங் எடுக்கப்படும் அதுபோல இப்படமும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் மிகவும் குறைவான நாட்களிலேயே எடுத்து முடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேலும் இந்த படத்தில் அஜித்துடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரங்கராஜ் பாண்டே அஜித்துடன் இருபது நாட்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளார்.


அண்மையில் அஜித்தின் அடுத்த பிளான் என்ன என்று ரங்கராஜ் பாண்டே தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ அஜித்திற்கு அரசியலுக்கு வருவதற்கான ஆர்வம் இல்லை, ஆனால் அரசியல் பற்றியான ஆழ்ந்த சிந்தனை இருக்கிறது. அவருடைய அடுத்த பிளானாக என்னவாக இருக்கிறது என்றால். இளைஞர்களுக்கான ஒரு மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றை தொடங்க வேண்டும் என்பதாகதான் இருக்கிறது. அது கண்டிப்பாக உலகம் தரம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை” என்று கூறியுள்ளார்.


இந்நிலையில் புதிதாக இப்படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்றால் போனிகபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி கடைசியாக நடித்த மாம் படம் இந்தியாவில் வெளியாகி ஒரு வருடம் கழித்து சீனாவில் 30,000க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டது. அதுபோல தற்போது நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான பின்னர் டிசம்பர் மாதத்தில் சீனாவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT