Skip to main content

‘இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறிங்க’- வெளியானது நேர்கொண்ட பார்வை ட்ரைலர்!

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது ரிலீஸுக்கான அனைத்து வேலைகளையும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படம் பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர்தான் தயாரிக்கிறார்.
 

ajith kumar

 

 

ஆந்திராவிலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் நடைபெற்று இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

இந்நிலையில் திடீரென இன்று காலை ட்ரைலர் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியானது. அதனைஅடுத்து நெர்கொண்ட பார்வை ட்ரைலர் என்ற ஹேஸ்டேக் உலகளவில் ட்ரெண்டானது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் மாலை ஆறு மணிக்கு வெளியாகியுள்ளது. 
 

தலயின் 59 வது படமான இதை முடித்துவிட்டு தலயின் 60வது படத்தையும் போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத்தான் இயக்குகிறார் என்று சொல்லப்படுகிறது. அது முழுக்க முழுக்க வினோத் ஸ்டைலில் உருவாகும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கக்கூடும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

 நடிகர் அஜித் வீட்டின் தடுப்புச்சுவர் முற்றிலுமாக இடிப்பு

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Actor Ajith house barrier completely demolished

 

சென்னையில் நடிகர் அஜித் வசித்து வரும் ஈஞ்சம்பாக்கம் வீட்டின் முகப்பு மற்றும் தடுப்புச் சுவரை நெடுஞ்சாலைத் துறை இடித்துள்ளது. 

 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில்  சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  அக்கரை முதல் ஈஞ்சம்பாக்கம் வரை உள்ள நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிறிது தூரம் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

அதில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நடிகர் அஜீத் வசித்து வரும்  வீட்டின் முன்பு உள்ள முகப்பு மற்றும் தடுப்புச் சுவர் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிக்காக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் மதில் சுவர்கள் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நெடுஞ்சாலைத் துறை தரப்பிலிருந்து சுவர்கள் இடிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு நெடுஞ்சாலைத்துறை தரப்பிலிருந்து புதியதாகத்  தடுப்புச் சுவர் கட்டி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

 

 

Next Story

அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் காலமானர்!

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

producer ss chakravarthy passed away

 

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி காலமானார்.

 

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான நிக் ஆட்ர்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சிட்டிசன், ரேணிகுண்டா, காளை உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். நடிகர் அஜித்தை மட்டும் வைத்து ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய பல படங்களைத் தயாரித்துள்ளார். இவர் கடைசியாக சிம்பு - நெல்சன் கூட்டணியில் உருவாகி பின்பு கைவிடப்பட்ட வேட்டை மன்னன் படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.