ADVERTISEMENT

'காசேதான் கடவுளடா'....முதல் இடத்தை பிடித்த அஜித்

10:50 AM Dec 19, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் 'துணிவு' படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் கதை பணம் தொடர்பானது என்று ஏற்கனவே ஹெச்.வினோத் சொன்னது போல இப்பாடலின் வரிகளும் முழுக்க முழுக்க பணம் பற்றி தான் அமைந்துள்ளது. 'ஏகப்பட்ட இஎம்ஐ-ல நாடே கிடக்கு' என வரும் வரிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. யூட்யூபில் வெளியான இப்பாடல் 4.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இப்பாடல் வரிகள் எழுதி வைசாக் பாடியுள்ளார். அவரோடு மஞ்சு வாரியரும், ஜிப்ரானும் பாடியுள்ளனர். மஞ்சு வாரியர் பாடியுள்ளதால் ஆர்வமுடன் பாடலை கேட்ட ரசிகர்கள் அவரின் குரல் கேட்கவே இல்லை, எந்த இடத்தில் பாடியிருக்கிறார் என்றே தெரியவில்லை என சமூக வலைதளத்தில் மஞ்சு வாரியரை கிண்டலாக கலாய்த்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த கிண்டலுக்கு பதிலளித்த மஞ்சு வாரியர், "காசேதான் கடவுளடா பாடலின் லிரிக் வீடியோவில் எனது குரல் கேட்கவில்லை என சொல்பவர்கள் கவலைப்பட வேண்டாம். எனது குரல் பாடலின் வீடியோ வெர்ஷனுக்காக பதிவு செய்யப்பட்டது. உங்கள் அக்கறைக்கு நன்றி. கிண்டல் கேலிகளை ரசித்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT