ajith finished his dubbing for thunivu photos goes viral

மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

Advertisment

ad

Advertisment

மேலும், இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

'துணிவு' படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அஜித்தன் டப்பிங்கை முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் டீசர், ட்ரைலர் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது அஜித்தின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ட்ரெண்டாகும். குறிப்பாக விமான நிலையத்தில் ரசிகர்களுடன்அஜித் இருக்கும் புகைப்படம் மற்றும் பைக் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகும். ஆனால் தற்போது படம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.