Skip to main content

தீவிர யோசனையில் அஜித்

 

thunivu making video released

 

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் பொங்கலன்று வெளியான துணிவு படம் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் வசூல் குறித்த விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் உலகம் முழுவதும் ரூ.220 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இப்படத்தின் மேக்கிங் பணிகள் தொடர்பான சிறு வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது 1 நிமிடம் ஓடக்கூடிய மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் படத்தில் வரும் கப்பல் காட்சி எடுக்கப்பட்டதை விவரிக்கிறது. மேலும் ஒரு இடத்தில் அஜித் தீவிர யோசனையுடன் நிற்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 'ஏகே 62' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் அரவிந்த்சாமியும் சந்தானமும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

 

ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் இயக்கும் 'ஏகே 62' படம் தள்ளிப் போவதாகவும் அதாவது அஜித்தின் அடுத்த படமான 'ஏகே 63'-ஐ விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருக்கும் எனவும் சமூக வலைத்தளத்தில் சொல்லப்படுகிறது. மேலும் 'ஏகே 62' படத்தை 'தடம்', 'கலகத் தலைவன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.