ADVERTISEMENT

உங்கள் கடையை நயன்தாரா திறந்துவைக்க வேண்டுமா? - இதுதான் சம்பளம்

12:50 PM Oct 13, 2018 | parameshwaran

சினிமாவில் பிஸியாக இருந் தாலும் விளம்பரப் படங்களிலும் நடித்து நாலு காசு சம்பாதித்து நல்லபடியாக செட்டில் ஆவோம் என தீயாய் வேலை செய்கிறார்கள் ஹீரோயின்கள். இது மட்டும் போதாது ஜவுளிக்கடை, நகைக் கடை, செல்ஃபோன் கடை, பியூட்டி பார்லர், இன்னும் சொல்லப் போனால் அப்பளம், ஊறுகாய் மொத்தமாய் விற்கும் கடைகளையும் திறந்து கல்லா கட்டுவதில் ஹீரோயின்கள் செம கில்லாடி. திறப்பு விழாவிற்கு ஹீரோயின்கள் வாங்கும் ரேட் பட்டியலைக் கொடுத்துள்ளோம். இதைப் பார்த்து தமிழ் கூறும் நல்லுலகம் பயன் அடையட்டும்.

சமந்தா: ஹைதரா பாத், சென்னை என்றால் 10 லட்சம். தமிழ்நாட்டின் வேறு மாவட்டங்களுக்கு 15 லட்சம்.

நயன்தாரா: திருவ னந்தபுரம் 10 லட்சம், சென்னை 20 லட்சம். மற்ற மாவட்டங்கள் 15 லட்சம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


ஹன்சிகா: சென்னை 2 லட்சம். மற்ற மாவட்டங் கள் 5 லட்சம்.

ஐஸ்வர்யா ராய்: மும்பை 10 லட்சம், சென்னை 15 லட்சம்.

வித்யா பாலன்: மும்பை 10 லட்சம், பெங்களூரு 15 லட்சம், சென்னை 20 லட்சம்.

ராய்லட்சுமி: சென்னை 3 லட்சம், மற்ற மாவட்டங்கள் 5 லட்சம்.

த்ரிஷா: சென்னை 5 லட்சம், வெளி மாவட்டங் கள் 7 லட்சம்.

நமீதா: சென்னை 1 லட்சம், வெளி மாவட்டங் கள் 2 லட்சம்.



ஜோதிகா: சென்னை 1 லட்சம், வெளி மாவட்டங் கள் 3 லட்சம்.

அமலாபால்: கேரளா 5 லட்சம், சென்னை 7 லட்சம், வெளி மாவட்டங்கள் 8 லட்சம்.

சிருஷ்டி டாங்கே: சென்னை 2 லட்சம், வெளி மாவட்டங்கள் 4 லட்சம்.

கீர்த்தி சுரேஷ்: அம்பானி குரூப்பின் டிரெண்ட்ஸ் விளம்பர மாடலாக இருப்பதால் ஜவுளிக் கடை திறப்பு விழாவை ஒத்துக் கொள்வதில்லை. மற்றபடி கடைகள் என்றால் சென்னை 10 லட்சம், வெளி மாவட்டங்கள் 20 லட்சம்.

"மேயாத மான்' இந்துஜா: சென்னை 2 லட்சம், வெளி மாவட்டங்கள் 4 லட்சம்.


எமி ஜாக்சன்: சென்னை 8 லட்சம், வெளி மாவட்டங்கள் 15 லட்சம்.

தன்ஷிகா: சென்னை 1 லட்சம், வெளி மாவட்டங்கள் 2 லட்சம்.

சீதா: சென்னை 50 ஆயிரம், வெளி மாவட்டங்கள் 1 லட்சம்.

(கண்டிஷன்ஸ் அப்ளை என கம்பெனிகள் கண்ணுக்குத் தெரியாத சின்ன எழுத்தில் போடுவதுபோல, கையில் ரொக்கம் போக, தங்குவதற்கு தரத்துக்குத் தகுந்தபடி ஸ்டார் ஓட்டல், விமான டிக்கெட், உயர்தர உணவு வகைகளும் ஹீரோயின்கள் கண்டிஷன் களில் உண்டு)

ஸ்ஸ்ஸ்... அப்பாடா நாட்டுக்கு எம்பூட்டுப் பெரிய முக்கிய, அரிய சேதியக் கொடுத்துட்டோம்னு நினைக் கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்குது மக்களே!

-பரமேஷ்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT