ADVERTISEMENT

நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு - நீதிமன்றம் புது உத்தரவு

04:32 PM Aug 25, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது வரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ''சித்ரா மரணம் தொடர்பான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே சித்ராவின் கணவர் ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து குழப்பி வருகிறார். 2021 ஆம் ஆண்டிலிருந்து வழக்கின் விசாரணை, குற்றச்சாட்டு பதிவு செய்யும் கட்டத்திலேயே உள்ளது. வயது மூப்பு காரணமாக என்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளுவர் நீதிமன்றத்திற்கு சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்.

ஹேம்நாத், அவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். மேலும் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT