Skip to main content

விஷால் நிறுவனத்தில் மோசடி; உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

chennai high court new order vishal film factory financial issue case

 

விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் கணக்காளர் ரம்யா பணியில் இருந்தபோது ரூ 45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் புகார் ஒன்றினை காவல்துறையிடம் அளித்தார். இந்த வழக்கில் ரம்யா தான் கைது செய்யப்படக்கூடும் என்று முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு நேற்று (9.3.2022) விசாரணைக்கு வந்த போது," இதில் மனுதாரர் ரம்யா ரூ. 45 லட்சத்தில் 21 லட்சம் செலுத்தி விட்டதாக கூறப்பட்டது. மேலும் அவருக்கு ஜாமீன் வழங்க விஷால் தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்ப்பும்  தெரிவிக்காத காரணத்தால் நிபந்தனையுடன் கூடிய  முன் ஜாமீனை வழங்கி நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டார். அத்துடன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ரம்யா 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் பிணைத் தொகையை ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்