ADVERTISEMENT

ஆஸ்கர் குழுவின் அழைப்பை ஏற்ற சூர்யா; திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் பாராட்டு 

11:48 AM Jun 30, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான 94-வது ஆஸ்கர் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் வில் ஸ்மித்தின் நடவடிக்கை பெரும் பேசும் பொருளாக மாறி, பின்பு வில் ஸ்மித் 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பின் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தாழ்மையுடன் ஏற்றுக்கொண்ட நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சூர்யாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற எம்.பி கனிமொழி, ஜோதிமணி, பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மற்றும் பல திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பில் சேர உலகளவில் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து சூர்யா, பாலிவுட் நடிகை கஜோல், இந்தி இயக்குநர் ரீமா காட்டி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT