Actor Surya has thanked the Chief Minister

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகஇருக்கும் சூர்யா இயக்குநர் தா.செ ஞானவேல் இயக்கத்தில் 'ஜெய் பீம்' படத்தில் நடித்துள்ளார். ரஜிஷா விஜயன், மணிகண்டன், லியோ மோல் ஜோஸ் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2டி எண்டர்டைன்மென்ட்நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பழங்குடி இன மக்களுக்குக் குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார்.

ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் நாளை வெளியாகவுள்ள நிலையில் தமிழக முதல்வர், மு.க ஸ்டாலின் 'ஜெய் பீம்' படத்தைப் பார்த்துள்ளார். அதனைத்தொடர்ந்து, பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதுதான்ஒரு சிறந்த கலைப் படைப்பு எனக் கூறி படக்குழுவுக்குப் பாராட்டுகள் என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் முதல்வரின்இந்த ட்விட்டர் பதிவுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்," வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன்.மாண்புமிகு தமிழக முதல்வரின் இந்த பாராட்டு 'ஜெய் பீம்' படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது.ஜெய் பீம் படக்குழுவினர் அனைவரின்சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment