ADVERTISEMENT

இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் இணையும் தனுஷ்!

11:43 AM Dec 20, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ படத்திலும், ஆனந்த் எல். ராய் இயக்கும் ‘அத்ரங்கி ரே' படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து நடிகர் தனுஷ், செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துவருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தற்போது செல்வராகவன் நடிக்கும் 'சாணிக்காயிதம்' படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து கேங்ஸ்டார் படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் வசந்த் ரவி நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள 'ராக்கி' திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT