ADVERTISEMENT

நடிகையை மணந்துகொண்டார் '8 தோட்டாக்கள்' இயக்குநர்

12:43 PM Sep 08, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2017-ஆம் ஆண்டு '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் அறிமுகமாகி பலரது கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் '8 தோட்டாக்கள்' படத்திற்கு பிறகு 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கினார். அதர்வா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பின்பு இப்படத்தின் விமர்சனம் தொடர்பாக தனது சமூக வலைதளத்தில், "இப்படத்தில் ஏற்பட்ட குறைகளுக்கு மன்னிக்கவும். அடுத்த முறை ஒரு சிறந்த படத்தை வழங்க நான் கடினமாக உழைப்பேன்." என பதிவிட்டிருந்தார். இவரது செயலை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் ஸ்ரீ கணேஷ் நடிகை சுகாசினி சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அப்புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சுகாசினி சஞ்சீவ், விஜய் சேதுபதியின் 'சீதக்காதி', உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT