/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/88_59.jpg)
வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராஃப், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரம் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பெஞ்சமின். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான மெய்ப்படச் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சேலத்தில் நடந்த திருமண நிகழ்வில் நடிகர் பெஞ்சமின் கலந்து கொண்டுள்ளார். அப்போது மணமக்களுக்கு பூண்டால் கட்டப்பட்ட மாலை மற்றும் 2 கிலோ பூண்டு அடங்கிய பூங்கொத்து ஆகியவைகளை கொடுத்து வாழ்த்தினார். அவரோடு நடிகர் முகமது காசிம் என்ற நடிகரும் சென்றுள்ளார். இவர்களின் பரிசைப் பார்த்து மணமக்கள் புன்னகைத்துவாங்கிக் கொண்டனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.பூண்டின் விலை கடந்த டிசம்பர் மாதம் முதல் உயரத் தொடங்கியது. கடந்த சில தினங்களாக 1 கிலோ பூண்டு ரூ.500 முதல் ரூ.550 வரை விற்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)