ADVERTISEMENT

"360 டிகிரியில்..." - கமல் குறித்து ஷங்கர் ட்வீட்

10:50 AM Jun 08, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் 'விக்ரம்' திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் 'விக்ரம்' படத்தை இயக்குநர் ஷங்கர் பார்த்து கமல் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்தான ட்விட்டர் பதிவில், " விக்ரம் திரைப்படம் வாவ். கமல்ஹாசன் சாரை பெரிய திரையில் 360 டிகிரியில் பார்ப்பது உண்மையான லெஜண்ட் போல் உள்ளது. பிரமாண்டமான ஸ்டைல் மற்றும் உழைப்பு லோகேஷ் கனகராஜிடம் இருக்கிறது. இன்டர்வெல் அற்புதமாக உள்ளது. அனிருத் ரியல் ராக்ஸ்டார். அன்பறிவு மாஸ்டர்ஸ் சூப்பர். படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் " என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சிவகார்த்திகேயனும் 'விக்ரம்' படத்தை பார்த்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், " விக்ரம் படம் டோட்டல் ப்ளாஸ்ட். கமல்ஹாசன் சாரின் ஸ்டைல், லோகேஷ் கனகராஜின் மேக்கிங், அனிருத்தின் இசை, அன்பறிவு-வின் டெரிஃபிக் ஸ்டண்ட்ஸ், ஃபகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு, சூர்யா சாரின் சர்ப்ரைஸ் என அனைத்தும் அற்புதமான அனுபவத்தை தந்தது. மகத்தான வெற்றிக்கு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் " என பதிவிட்டுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT