/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-4_22.jpg)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி 'சந்தானம்' என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் 'அமர்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் நாளை (03.06.2022) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் குறிப்பிட்டு புதிய போஸ்டர் ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி கமல்ஹாசன், படத்தின் தலைப்பான 'விக்ரம்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதாக தகவல் வெளிவந்தது. ஆனால் கமல்ஹாசன் தான் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என இந்த போஸ்டரின் மூலம் உறுதியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)