/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/62_16.jpg)
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கவுள்ளார். ‘விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போதுமுழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றிய குழுவினரே இப்படத்திலும் பணியாற்றுவார்கள் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் கைவசம் முன்னரே ஒப்புக்கொண்ட படங்கள் நிறைய இருப்பதால், ‘விக்ரம்’ படத்திற்கு தேதி ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, அவர் இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக 'அங்காமலே டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு', 'சர்கார்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரனை ஒப்பந்தம் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)