ADVERTISEMENT

ஐபிஎல் 2024 ஏலம் எப்போது? ; வெளியான புது அப்டேட்

08:41 AM Oct 27, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் 2008 முதல் நடந்து வருகிறது. அதன் 17 ஆவது சீசன் 2024 இல் நடக்க உள்ளது. இனி ஒவ்வொரு வருடமும் வீரர்கள் ஏலம் நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், அது எப்போது நடக்கும் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. பெரும்பாலும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் ஐபிஎல் ஏலம் நடக்கலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறையாக இந்தியாவிற்கு வெளியில் ஐபிஎல் ஏலமானது நடக்க உள்ளது. தக்கவைக்கப்பட்ட அணி வீரர்களின் பட்டியலை கொடுக்க கடைசி தேதி நவம்பர் 10 எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் 100 கோடி வரை ஏலத்தில் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது கடந்த ஐபிஎல் ஏலத்தை விட 5 கோடிகள் அதிகமாகும்.

ஐபிஎல் 2023 இல் பயன்படுத்தியது போக மீதமுள்ள தொகை எனப்படும் அணிகளின் பர்ஸ் தொகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகமான தொகை வைத்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் அணி 12.20 கோடிகள் வைத்துள்ளது. ஐபிஎல் அணிகளில் குறைந்தபட்ச பர்ஸ் தொகையாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 லட்சத்தை வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் 6.55 கோடிகளும், குஜராத் மற்றும் டெல்லி அணிகள் 4.45 கோடிகளும், லக்னோ அணி 3.55 கோடிகளும், ராஜஸ்தான் ராயல்ஸ் 3.35 கோடிகளும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 1.75 கோடிகளும், கொல்கத்தா அணி 1.65 கோடிகளும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.5 கோடிகளும் கொண்டுள்ளது.

ஐபிஎல் 2023 ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் கரன் ஆவார். இவர் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 18.5 கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஆவார். இவரைத் தாண்டி ஐபிஎல் 2024 ஏலத்தில் எந்த வீரரும் எடுக்கப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

- வெ.அருண்குமார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT