ipl

2022 ஆம் ஆண்டையொட்டியஐபிஎல் மெகா ஏலம், பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில்ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின்பட்டியலைபிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

பொதுவாக ஐபிஎல் ஏலத்திற்கு, அணிகளில் இடம்பெறாத வீரர்கள்தங்களைப் பதிவு செய்து கொள்வார்கள். அப்படி பதிவு செய்துகொண்டவீரர்களின் பட்டியல், அனைத்து ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கும் அனுப்பப்படும். அப்படி அனுப்பப்பட்ட பட்டியலில்இருந்து அணி உரிமையாளர்கள், தாங்கள் ஏலத்தில் எடுக்க விரும்பும்வீரர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறு அணி உரிமையாளர்கள், அணியில் எடுக்க விரும்பும்வீரர்கள்மட்டுமேஏலத்தில் இடம்பெறுவர்.

Advertisment

அந்த வகையில் 1214 வீரர்கள் ஏலத்திற்காகதங்கள் பெயர்களை பதிவு செய்த நிலையில், 590 வீரர்கள் மட்டுமே ஏலத்திற்கான இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 590 வீரர்களில் 228 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள், 355 பேர் எந்தவொரு சர்வதேச போட்டியிலும்விளையாடாதவர்கள்,ஏழு பேர்ஐசிசியில்முழு உறுப்பினராக அல்லாத நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.