chr

Advertisment

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியின் போது, மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில், தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் நிருபரிடம் மோசமான செய்கைகளைக் காட்டினார் என்று செய்தி தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் மற்றும் தி ஏஜ் நாளேட்டிலும் வெளியானது. இந்தச் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. ஓய்வறையில் இருந்தபோது நிருபர்கள் யாரும் எனது அறைக்கு வரவில்லை. இந்தச் செய்தி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் எனக் கூறி அந்த பத்திரிகைகள் மீது வழக்கு தொடுத்தார் கெயில். இதில் கெயிலுக்கு எதிரான சாட்சியங்களை பத்திரிகை நிறுவனம் சமர்ப்பிக்காததால் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி அந்த நிறுவனம் கெயிலுக்கு 3 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் இழப்பீடாக தரவேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.