ADVERTISEMENT

ஆர்சிபி-யின் தோல்விகளுக்கு கோலியை டார்கெட் செய்வது சரியா? 

05:06 PM Apr 01, 2019 | santhoshkumar

இந்த வருடமாவது ஆர்சிபி அணி வெற்றிகளை குவிக்கும் என்று காத்திருந்த அந்த அணியின் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. என்ன தவறு நடக்கிறது என்பதை அறிந்தும் அதை நிவர்த்தி செய்ய தவறி வருகிறது ஆர்சிபி அணி. மும்பை அணிக்கு எதிரான போட்டியை தவிர மற்ற 2 போட்டிகளிலும் மிகவும் மோசமாகவே விளையாடியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமூக வலைதளங்களில் வழக்கத்தை விட அதிகம் கலாய்க்கப்பட்டு வருகிறது ஆர்சிபி அணியின் ஆட்டங்கள்.கோலியின் கேப்டன்ஷிப் தான் இதற்கு காரணம் என்ற கருத்து அதிகரித்து வருகிறது. டெல்லி அணியை போல அணியின் பெயரை மாற்றுங்கள். அப்படியாவது அணிக்கு அதிர்ஷ்டம் வருகிறதா என்று பார்க்கலாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அணி தேர்வு மற்றும் கேப்டன்ஷிப் ஆகியவற்றில் அடிப்படையில் உள்ளதவறுகளை இந்த வருடமும் மாற்றவில்லை. அணியின் காம்பிநேசனில் செய்யப்படும் தவறுகள், வீரர்களை சரியான இடத்தில் களமிறக்குவதில் ஏற்படும் குழப்பங்கள், சிறந்த முறையில் வீரர்களுக்கு உற்சாகப்படுத்தி நம்பிக்கை அளிப்பதில் உள்ள குறைபாடு என சில காரணங்களால் பெங்களூர் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.


கோலி, டி வில்லியர்ஸ் என 2 பேட்ஸ்மேன்களையும், உமேஷ் யாதவ், சாஹல் என 2 பவுலர்களையும் மட்டுமே சுற்றி அணி விளையாடி வருகிறது. மற்ற வீரர்கள் டி20-க்கு ஏற்ற வீரர்களாக இருந்தாலும், போட்டியின் போது அவர்களது ஆட்டம் ஏமாற்றம் அளிக்கிறது. இது ஒரு முறை, இரண்டு முறை நடக்கவில்லை. பல சீசன்களாக ஆர்சிபி அணி மற்ற புது வீரர்களுக்கு தேவையான சுதந்திரத்தையும், நம்பிக்கையையும் அளிக்க தவறிவிட்டது.


ஒரு வீரருக்கு தேவையான சுதந்திரம் இருந்தால் மட்டுமே அந்த வீரரால் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். 2018-ல் விளையாடிய ஆர்சிபி அணியில் கோலி, டி வில்லியர்ஸ், மன்தீப் சிங் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 10+ போட்டிகளில் விளையாடவில்லை. அதேபோல பவுலிங்கில் சாஹல், உமேஷ்யாதவ், சிராஜ் தவிர எந்த பவுலரும் 10+ போட்டிகளில் விளையாடவில்லை.


2017 மற்றும் 2018 என இரண்டு வருடங்களிலும் அணியில் தொடர்ந்து வீரர்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். ஒரு வீரர் தான் அடுத்த போட்டியில் விளையாடுவோமோ? இல்லையா? என்ற மனநிலையில் அதிக அழுத்தத்தில் ஆடும்போது அவரால் தன்னுடைய முழுத்திறனையும் வெளிப்படுத்துவது மிகவும் கடினம். இதுதான் அணிக்கு பெரிய பலவீனமாக உள்ளது.


அணியை ஒவ்வொரு முறையும் மாற்றுவது பற்றி பல காலங்களாக கோலி மீது விமர்சனம் இருந்து வருகிறது. ஆர்சிபி அணியில் மட்டுமல்ல. இந்திய அணியிலும் இதே நிலைமைதான்.


கோலி மட்டுமே ஆர்சிபி அணியின் தோல்விகளுக்கு காரணமல்ல. ஐபிஎல் ஏலங்களின் போது அணிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்வதில் சொதப்பி வருகிறது அணி நிர்வாகம். இந்திய உள்ளூர் அணி வீரர் அக்சீப் நாத்தை இந்த ஆண்டு ஏலத்தில் 3.6 கோடிக்கு எடுத்தது. ஆனால் இதுவரை அணியில் களமிறக்கப்படவில்லை.


வீரர்களின் மனநிலை, அவர்களின் பலம், பலவீனங்கள் ஆகியவற்றை அறிந்து வீரர்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்த உதவ வேண்டியது அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் ஆகியோரின் பொறுப்பு. ஆனால் ஆர்சிபி இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படவில்லை.


இந்திய வீரர்களில் விராத்கோலி,பார்த்திவ்பட்டேல் ஆகியோரை தவிரபேட்டிங்கில் ரன்களை குவிக்கும் வீரர்கள் இல்லை. இது மிகப்பெரிய விஷ்யம். சென்ற வருடம் இருந்த இந்த பலவீனத்தை இந்த வருடமும் மாற்றவில்லை.

மற்ற அணிகளுக்கு ஃபாஸ்ட் பவுலிங் அல்லது ஸ்பின் பவுலிங் என ஏதாவது ஒரு பவுலிங் யூனிட் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் ஆர்சிபி அணிக்கு ஃபாஸ்ட் மற்றும் ஸ்பின் என 2 பவுலிங் யூனிட்டும் பலமாக இல்லை.சாஹல் தவிரடி20 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் இல்லை. உமேஷ்ஓரளவு சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் விக்கெட் டேக்கர்கள் அணியில் சென்ற வருடமும் இல்லை. இந்த வருடமும் இல்லை. மேலும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசஸ்பெஷல் பவுலர்கள் அணியில் சில சீசன்களாக இல்லை.

கெயில், ராகுல், வாட்சன், டி காக் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் பெங்களூர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வாட்சன் பெங்களூர் அணியிலிருந்து சென்னை அணிக்கு வாங்கிய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். பெங்களூர் அணியில் இருக்கும்போது சரியான இடத்தில் வாட்சன் களமிறக்காமல் இருந்தது பெரும் தவறாக அமைந்தது. சென்னை அணிக்கு ஓப்பனங்கில் தற்போது கலக்கி வருகிறார். இதுபோல பல உதாரணங்கள் உண்டு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றில் பலமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் இருந்ததில்லை. ஆனால் ஸ்பின் பவுலிங் யூனிட் மிகவும் சிறப்பாக இருக்கும். இருக்கும் பவுலர்களை கொண்டு, களவியூகங்களின் மூலம் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறார் தல தோனி. அந்த களவியூகங்களில் தோல்விஅடைகிறார் கோலி.

டி20 ஸ்பெசலிஸ்ட் பவுலர் நாதன் கொல்டர் நைல், டி20ஸ்பெசலிஸ்ட் ஆல்ரவுண்டர்மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர்பெங்களூர் அணிக்கு திரும்பவுள்ள நிலையில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

சரியான டீம்காம்பிநேசனுக்கு ஏற்பவீரர்களை எடுக்காமல் தவறு செய்து வருகிறதுஅணி நிர்வாகம். சில விஷ்யங்களில் கோலி சரியாக செயல்படுவதில்லை.இந்த நிலையில் விராத் கோலி என்ற ஒற்றை நபர் மட்டும் டார்கெட் செய்யப்படுவது ஏற்புடையதல்ல. அவர் பல விதங்களில் தோல்விக்கு பொறுப்பு ஏற்கப்பட வேண்டியவர். ஆனால் அவர் மட்டுமே காரணமல்ல. பயிற்சியாளர்கள், டீம்மேனேஜ்மன்ட்ஆகியோரும்சில விதத்தில் காரணம்தான்.

பெங்களூர் அணியின் பயிற்சியாளராக வெட்டோரி 2014 முதல்2018-ஆம் ஆண்டு வரை இருந்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளில் இரு முறை மட்டுமே ப்ளேஃஆப் சுற்றுக்குதகுதி பெற்றுள்ளது. தற்போது அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன், பவுலிங் பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ராஆகியோர் உள்ளனர்.கோலிதலைமையில் 96 போட்டிகளில்44 வெற்றி,47 தோல்வி 2 டிரா, 3போட்டிகள் முடிவு இல்லாமல் போனது.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT