2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் 13 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அனைத்து அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.

Advertisment

kholi devilliers ask sorry to rcb fans

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த தொடருக்கான புள்ளி பட்டியலில் சென்னை அணி 18 புள்ளிக்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மும்பை அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி அணியும் உள்ளது. இந்த மூன்று அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், நான்காவதாக எந்த வரும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஆடிய 13 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி இன்று தனது கடைசி ஆட்டத்தை விளையாட உள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று தனது கடைசி ஆட்டத்தை விளையாடவுள்ள இந்த அணியின் கேப்டன் கோலி மற்றும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏ.பி.டீவில்லியர்ஸ் ஆகியோர் பெங்களூரு ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர்கள், மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

Advertisment

வீடியோவில் டீவில்லியர்ஸ் பேசும்போது, ''ஆர்சிபி ரசிகர்களாகிய நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. இந்த சீசனில் எங்களது ஆட்டம் பல ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். தொடர்ந்து எங்களுக்கான ஆதவை அளியுங்கள்'' என்றார்.

அந்த அணியின் கேப்டன் கோலி பேசும்போது, ''இந்த சீசனில் கடைசிப் போட்டி. நிச்சயம் இந்த சீசன் எங்களுக்கு ஏமாற்றமான ஒன்றுதான். எப்போதும் எங்களுக்காக உங்கள் ஆதரவை தரும் நீங்கள்தான் ஐபிஎல்லின் சிறந்த ரசிகர்கள்" என கூறியுள்ளார்.