ADVERTISEMENT

போராடித் தோற்ற மும்பை இந்தியன்ஸ்; முதல் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ்!

11:43 PM Mar 27, 2024 | arunv

ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிளாசனும் தன் பங்கிற்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

ADVERTISEMENT

இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்பு கெயில் 175 அடித்த அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தனர். இஷான் 13 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்தார். ரோஹித் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திலக் வர்மா மற்றும் நமன் திர் இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. இருவரும் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் பாண்டியாவுடன் டிம் டேவிட் இணைந்தார். கேப்டன் பாண்டியா முதலிரண்டு பந்துகளில் அதிரடி காட்டி பின்னர் ரன் எடுக்க திணறினார். ஆனால் டிம் டேவிட் ஓரளவு அதிரடி காட்டி 42 ரன்கள் எடுத்தார். முதல் முறையாக களமிறங்கிய ஷெபெர்டு 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் மும்பை அடித்த 246 ரன்களும் சேர்த்து ஒரு டி20 இல் இரு அணிகளும் சேர்த்து அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT